www.garudabazaar.com

மீண்டும் தமிழில் மம்முட்டி! ஷூட்டிங் தமிழ்நாட்டில் இந்த ஊர்லயா? வெளியான BTS புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவின் இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

Mammootty Lijo Jose Pellissery Movie Nanpakal Nerathu Mayakkam

இவர் இயக்கத்தில் முன்பு வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.

Mammootty Lijo Jose Pellissery Movie Nanpakal Nerathu Mayakkam

இந்நிலையில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என புதிய படத்தை இயக்குகிறார். மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டார்.

Mammootty Lijo Jose Pellissery Movie Nanpakal Nerathu Mayakkam

வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக இந்த படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பில் மம்முட்டி இணைந்துள்ள BTS புகைப்படம் வெளியாகி உள்ளது. 

Mammootty Lijo Jose Pellissery Movie Nanpakal Nerathu Mayakkam

Mammootty Lijo Jose Pellissery Movie Nanpakal Nerathu Mayakkam

மேலும் செய்திகள்

Mammootty Lijo Jose Pellissery Movie Nanpakal Nerathu Mayakkam

People looking for online information on Lijo Jose Pellissery, Mammootty, Nanpakal Nerathu Mayakkam will find this news story useful.