Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

'Cool and Swag' கேங்ஸ்டர் ஆக மம்மூட்டி.. அசர வைக்கும் 'பீஷ்ம பர்வம்' டீசர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டி நடிப்பில், கடைசியாக 'ஒன்' என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.

mammootty new film Bheeshma Parvam teaser released

இதனைத் தொடர்ந்து, அமல் நீரத் இயக்கத்தில், 'பீஷ்ம பர்வம்' என்னும் திரைப்படம் ஒன்றை நடித்து முடித்துள்ளார் மம்மூட்டி.

அமல் நீரத் இயக்கிய முதல் திரைப்படமான 'Big B'யில் மம்மூட்டி தான் கதாநாயகனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, 'பீஷ்ம பர்வம்' என்னும் திரைப்படத்தின் மூலம், இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

எதிர்பார்ப்பு

மம்மூட்டியுடன் சவுபின் ஷாஹிர், நதியா மொயுது, ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி, ஃபர்ஹான் ஃபாசில், வீணா நந்தகுமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் டிராமா வகையில், இந்த திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும், ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

பீஷ்ம பர்வம் டீசர்

இந்த படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், மார்ச் 3 ஆம் தேதி, திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பீஷ்மா பர்வம் படத்தின் டிரைலரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

ஸ்டைல் லுக்

மைக்கேல் என்னும் கதாபாத்திரத்தில் வரும் மம்மூட்டி, மிகவும் மாஸாக, அதே வேளையில் ஸ்டைலிஷ் ஆகவும், தோன்றியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இயக்குனர் அமல் நீரத் திரைப்படங்கள் அனைத்தும், ஒரு வித ஸ்டைல் லுக்கில் இருக்கும். அதனை டீஸரிலேயே கண் முன் நிறுத்தியுள்ளார் அமல் நீரத்.

அடுத்த படங்கள்

இன்று வெளியான டிரைலர், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. பீஷ்ம பர்வம் திரைப்படத்திற்கு பிறகு, 'புழு', 'நண்பகல் நேரத்து மயக்கம்', 'CBI 5' உள்ளிட்ட திரைப்படங்களிலும் மம்மூட்டி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

'COOL AND SWAG' கேங்ஸ்டர் ஆக மம்மூட்டி.. அசர வைக்கும் 'பீஷ்ம பர்வம்' டீசர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

mammootty new film Bheeshma Parvam teaser released

People looking for online information on Amal Neerad, Bheeshma Parvam, Mammootty, Nadhiya, Puzhu, Soubin Shahir will find this news story useful.