Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

புது வீடு வாங்கிய மோகன்லால்.. விசிட் அடித்த மம்மூட்டி.. வைரலாகும் புகைப்படம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் மோகன்லால், மம்மூட்டி ஆகியோர்.

Mammootty visit to mohanlal new house in kochi

மலையாள திரை உலகில் பல ஆண்டுகளாக தொடர்ந்து சூப்பர்ஸ்டார்களாக திகழ்ந்து வரும் மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோர், ஏராளமான பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்ட் மற்றும் விருதுகளுக்கும் சொந்தக்காரர்கள்.

தங்களின் மகன்கள் உட்பட அடுத்தடுத்து தலைமுறை நடிகர்கள் நடிக்க வந்து கொண்டே இருக்கும் நிலையிலும், தொடர்ந்து அசைக்க முடியாத நம்பர் 1 நட்சத்திரங்களாக தான் இருவரும் இருந்து கொண்டே இருக்கின்றனர்.

இருவரது படங்களுக்கு இடையே போட்டிகள் உருவானால் கூட, சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலம் முதல், தொடர்ந்து சிறந்த நண்பர்களாக தான் மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோர் இருந்து வருகின்றனர்.

Mammootty visit to mohanlal new house in kochi

அது மட்டுமில்லாமல், நிறைய திரைப்படங்களிலும் இருவர் இணைந்து நடித்துள்ளனர். இது போக விருது விழாக்கள், நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, இருவரும் ஒன்றாக சந்தித்துக் கொள்ளும் புகைப்படங்களும் அடிக்கடி இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில், தற்போது நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோர் இணைந்து சந்தித்துள்ளது தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கொச்சியில் உள்ள குந்தனூர் என்னும் பகுதயில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் இரண்டு மாடி ஒன்றை நடிகர் மோகன்லால் சமீபத்தில் வாங்கி இருந்தார். இந்த புதிய வீட்டின் கிரஹப்பிரவேசமும் கடந்த மாதம் நடந்திருந்தது.

மோகன்லாலின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து, சில தினங்கள் கழித்து நடிகர் பிருத்விராஜ் மற்றும் அவரது மனைவி மோகன்லால் வீட்டிற்கு விசிட் அடித்த புகைப்படங்களும் அதிகம் வைரலாகி இருந்தது.

Mammootty visit to mohanlal new house in kochi

இதனைத் தொடர்ந்து, நடிகர் மம்மூட்டி, மோகன்லாலின் புதிய வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார். அப்போது மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோர் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Mammootty visit to mohanlal new house in kochi

இதனை தங்களின் ட்விட்டர் பக்கத்திலும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். "லாலின் புதிய வீட்டில்" என மம்மூட்டி கேப்ஷனில் குறிப்பிட்டுள்ள நிலையில், "Ichakka" என மோகன்லால் தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

Mammootty visit to mohanlal new house in kochi

மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார்கள் சமீபத்தில் சந்தித்து கொண்ட புகைப்படம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Mammootty visit to mohanlal new house in kochi

People looking for online information on Mammootty, Mohanlal, New House will find this news story useful.