Valimai BWE
www.garudabazaar.com

பீஷ்ம பர்வம் படத்தின் டிரெய்லரில் கடைசி இரண்டு ஷாட்! நெகிழ்ந்து போன இந்திய திரையுலகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள மொழியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மம்முட்டி நடிக்கும் பீஷ்ம பர்வம் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Mammootty Amal Neerad Bheeshma Parvam Trailer

மெகாஸ்டார் மம்மூட்டி நடிப்பில், கடைசியாக 'ஒன்' என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, அமல் நீரத் இயக்கத்தில், 'பீஷ்ம பர்வம்' என்னும் திரைப்படம் ஒன்றை நடித்து முடித்துள்ளார் மம்மூட்டி.

அமல் நீரத் இயக்கிய முதல் திரைப்படமான 'Big B'யில் மம்மூட்டி தான் கதாநாயகனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, 'பீஷ்ம பர்வம்' என்னும் திரைப்படத்தின் மூலம், இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

Mammootty Amal Neerad Bheeshma Parvam Trailer

இந்த படத்தை அமல் நீரத் தனது சொந்த அமல் நீரத் புரொடக்ஷன்ஸ் கீழ் இந்த படத்தை  தயாரிக்கிறார்.தேவதாத் ஷாஜி, அமல் நீரத் ஆகியோருடன் இணைந்து எழுதிய பீஷ்ம பர்வம் கேங்க்ஸ்டர் டிராமா வகைமையில் இந்தப்படம் உருவாகிறது என்று கூறப்படுகிறது. மார்ச் 3 ஆம் தேதி, இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சவுபின் ஷாஹிர், நதியா மொயுடு, ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி, ஃபர்ஹான் ஃபாசில், வீணா நந்தகுமார், அனேகா, அனசூயா, மாலா பார்வதி மற்றும் லீனா ஆகியோர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கின்றனர். சவுபின் சாகீர் அஜஸ் எனும் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்.

சவுபின் அமல் இயக்கிய அன்வர் படத்தில் இயக்குனருக்கு உதவியாளராக பணியாற்றியவர், தற்போது அதே அமல் இயக்க பீஷ்ம பர்வம் படத்தில் முக்கிய ரோலில்  தோன்றியுள்ளார். பிரேமம் பட ஒளிப்பதிவாளர் ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Mammootty Amal Neerad Bheeshma Parvam Trailer

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. மைக்கேல் என்னும் கதாபாத்திரத்தில் வரும் மம்மூட்டி, மிகவும் மாஸாக, அதே வேளையில் ஸ்டைலிஷ் ஆகவும், தோன்றியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. மேலும் கடைசி இரண்டு ஷாட்டில் சமீபத்தில் மறைந்த நடிகர்களான நெடுமுடி வேணு, KPAC லலிதா ஆகியோர் தோன்றி உள்ளது. இதனால் இந்த டிரெய்லர் மலையாள திரை உலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Mammootty Amal Neerad Bheeshma Parvam Trailer

பீஷ்ம பர்வம் படத்தின் டிரெய்லரில் கடைசி இரண்டு ஷாட்! நெகிழ்ந்து போன இந்திய திரையுலகம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mammootty Amal Neerad Bheeshma Parvam Trailer

People looking for online information on Bheeshma Parvam, Bheeshma Parvam Trailer, Mammooty, Trailer will find this news story useful.