www.garudabazaar.com

மம்முட்டி - ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய படம்! வெளியான வித்தியாசமான டீசர் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொச்சி: மம்முட்டி - ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 

Nanpakal Nerathu Mayakkam Official Teaser Mammootty

மலையாள சினிமாவின் இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் இயக்கத்தில் முன்பு வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.

Nanpakal Nerathu Mayakkam Official Teaser Mammootty

லிஜோ, தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என புதிய படத்தை இயக்குகிறார். மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டார்.

Nanpakal Nerathu Mayakkam Official Teaser Mammootty

வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் இல்லாமலே இந்த படத்தின் டீசர் அமைந்துள்ளது. 

 

மம்முட்டி - ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய படம்! வெளியான வித்தியாசமான டீசர் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nanpakal Nerathu Mayakkam Official Teaser Mammootty

People looking for online information on Lijo Jose Pellissery, Mammootty, Nanpakal Nerathu Mayakkam, Official Teaser, Ramya Pandian will find this news story useful.