www.garudabazaar.com

விமல் நடிப்பில் புதிய படம் இயக்கும் விஜய் பட இயக்குனர்.. வர்ற பொங்கலுக்கு ரிலீஸா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பசங்க’ படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பிரபலமானவர் விமல்.

Thamizhan Director Abdul Majith will be directing a film with Vimal

Also Read | VIDEO: தனது வாழ்வின் சோகத்தை பகிர்ந்த ஜனனி.. முதல் ஆளாக தடுக்க வந்த விக்ரமன்! 2வது 3வது ஆள் இவங்களா?

பின்னர் சற்குணம் இயக்கிய ‘களவாணி’ திரைப்படம் விமலுக்கு மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் தனக்கே உரிய இயல்பான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால்  அனைவரையும் கவர்ந்தார் நடிகர் விமல். இதனைத் தொடர்ந்து பல்வேறு கிராமத்துக் கதைகள் மற்றும் நகர கதைகளில் நடித்த விமல், காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் திரைப்படங்களிலும் நடித்தார்.

களவாணி படத்துக்குப் பிறகு மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தூங்கா நகரம், தேசிங்கு ராஜா, வாகை சூட வா மற்றும் கலகலப்பு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார்.

சமீபத்தில் ஜி 5 ஓடிடி தளத்தில் விமல், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் ரிலீஸானது. இந்த வெப் தொடரை புருஸ் லி படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பரவலான கவனத்தைப் பெற்றது.

Thamizhan Director Abdul Majith will be directing a film with Vimal

இந்நிலையில் விமல் அடுத்ததாக இயக்குனர் அப்துல் மஜீத் இயக்கத்தில் நடித்து வருகிறார். 2002-ல் தளபதி விஜய் நடித்த "தமிழன்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அப்துல் மஜீத்.

பின்னர் துணிச்சல், பைசா, கிமு, டார்ச் லைட் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார் அப்துல் மஜீத். அப்துல் மஜீத் தற்போது விமல், யோகி பாபு நடிப்பில் புதிய படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்.

தனது Confident Film Cafe படநிறுவனம் மூலம் இந்த படத்தினை தயாரித்து வரும் 2023 பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ ரிலீஸ் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

விமலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா & சாம்மிகா நடிக்கின்றனர்.  யோகிபாபு, ஜான் விஜய் , எம்.எஸ்.பாஸ்கர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, வேலூர் பகுதிகளில் நடந்து வருகிறது.

Also Read | "சொடக்கு மேல சொடக்கு".. ஜி.பி. முத்துவின் வெறித்தனமான டான்ஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Thamizhan Director Abdul Majith will be directing a film with Vimal

People looking for online information on ABDUL MAJITH, Thamizhan Director Abdul Majith, Vimal will find this news story useful.