நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொரில்லா’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஆல் இன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் விஜய் ராகவேந்திரா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் டான் சாண்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகி ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.
மேலும், சிம்பான்ஸி குரங்கு ஒன்று இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. இத்துடன் சதீஷ், ராதாரவி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் வரும் ஜூன்.21ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.
The Satellite rights of our #Gorilla has been bagged by @ZeeTamil #GorillaWithZeeTamil pic.twitter.com/GYf3gWUHbU
— Jiiva (@Actorjiiva) June 6, 2019