ஹரிஷ் கல்யாணின் பாலிவுட் சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹரிஷ் கல்யாண் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்துக்கு பிறகு 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சஞ்சய் பாரதி இயக்குகிறார்.

Vivekh to act in Harish Kalyan's Dharala Prabhu

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் ரெபா மோனிகா, முனீஷ்காந்த், பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பாக ஏ.எம்.கோபாலன் தயாரித்து வருகிறார்.

இதனையடுத்து ஹரிஷ் கல்யாண் தாராள பிரபு படத்தில் நடிக்கவிருக்கிறார். பாலிவுட்டில் வெளியாகி ஹிட் அடித்த விக்கி டோனர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கா இந்த படம் உருவாகிறது.

ஹிந்தி படத்தில் இருக்கும் அளவிற்கு அடல்ட் கண்டென்ட் இல்லாமல், கருத்தரிப்பு மையங்களில் நடக்கும் மோசடி குறித்து பேசப்படும் என்றும், இது ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் நடிகர் விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.