நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜிப்ஸி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஒலிம்பியா மூவீஸ் பேனரின் கீழ் அம்பத்குமார் வழங்கும் இப்படத்தில் ஜீவா, நடாஷா சிங், சன்னி வெயின், லால் ஜோஸ், சுஷீலா ராமன், விக்ராந்த் சிங், கருணா பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜிப்ஸி’ திரைப்படம் இசை, அரசியல், காதல் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவும், ரேமண்ட் டெர்ரிக் கிராஸ்டா படத் தொகுப்பும் செய்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள தில்லான அரசியல் சார்ந்த வசனங்கள், இன்றைய அரசியலை தோல் உரிக்கும் விதமாக உள்ளன. இதைத் தொடர்ந்து இப்படத்தின் இசையும் இன்று வெளியாகிறது.
“ஒருத்தன் கிட்டயும் ஆதார் கார்டு இல்ல..”- ஜோக்கர் இயக்குநரின் அடுத்த படைப்பு வீடியோ