பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்து அவரே இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்துள்ளார்.
பயாஸ்கோப் ஃபிலிம் பிரேமர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் டிரெய்லருக்கு நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இது சிறந்த ஒன்று பார்த்திபன் சார். எப்பொழுதுமே வித்தியாசகமாகவும் அதனை சிறப்பமாக செய்கிறீர்கள். உங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த பார்த்திபன், 'யாருய்யா ஆர்யா ? இந்த காலத்துல அடுத்தவன் வெற்றிக்கு வாழ்த்துறது ? தன்னலமற்ற ரசிகர்களைத் தவிர யார்கிட்டயும் எதிர் பார்க்க முடியாத அந்த நற்பண்புள்ள நம்ம காதலின் நண்பர் ஆர்யாவுக்கு நன்றி!' என்று குறிப்பிட்டுள்ளார்.
'யாருயா ஆர்யா ?' - 'ஒத்த செருப்பு' டிரெய்லரின் விமர்சனத்துக்கு பார்த்திபன் பதில் வீடியோ