தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும், தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் ஜோதிகா.

கடந்த ஆண்டும் செக்கச் சிவந்த வானம்,காற்றின் மொழி,நாச்சியார் என வெற்றி படங்களை கொடுத்தார்.இதையடுத்து தற்போது ஜோதிகா சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காக்க காக்க படத்திற்கு பிறகு மீண்டும் ஜோதிகா இந்த படத்தில் ஆசிரியராக நடித்துள்ளார்.
குற்றவாளிகளை உருவாக்க பள்ளிக்கூடம் எதுக்கு ? - ரட்ச்சியான ஜோதிகா வீடியோ