கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த 'அடங்க மறு' கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி 'கோமாளி' எனும் படத்தில் நடித்துவருகிறார்.

இந்த படத்தில் காஜல் அகர்வால் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இந்த படத்தில் ஒவ்வொரு நாளும் ஜெயம் ரவியின் ஒவ்வொரு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த போஸ்டர்களில் விதவிதமான கெட்டப்புகளில் ஜெயம் ரவி காட்சியளிக்கிறார்.
அந்த வகையில் இந்த படத்தின் புதிய போஸ்டரை இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டுள்ளார். அதில், ஷாஜகான் வேடத்தில் இருக்கிறார். அவரை சுற்றி பெண்கள் கூட்டம் இருக்கிறது.
Here we Go @VelsFilmIntl Productions @actor_jayamravi brother's mindblowing #Comali5thLook , Dir @Pradeeponelife | @MSKajalAggarwal @SamyukthaHegde | @hiphoptamizha @Richardmnathan @SonyMusicSouth @vijaytelevision @agscinemas Congratz All!! pic.twitter.com/nkIta5IAQR
— D.IMMAN (@immancomposer) May 22, 2019