ஜெயம் ரவியின் 25வது படத்தில் மீண்டும் 'அப்பா - மகன்' காம்போ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லக்ஷ்மன். அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி - அரவிந்த்சாமி இணைந்து நடித்த போகன் படத்தை இயக்கினார்.

Stun Siva and his son Join again for Jayam Ravi's Film directed by Lakshuman

அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் 25 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படம் மூலம் லக்ஷ்மன், ஜெயம் ரவியுடன் 3 வது முறையாக இணையவுள்ளார்.  இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஸ்டன் சிவா தனது ட்விட்டர்  பக்கத்தில் இந்த படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில்,  இயக்குநர் லக்ஷ்மன் - ஜெயம் ரவி இணையவுள்ள படத்தில் நானும் எனது மகனும் இணைந்து சண்டைக் காட்சிகள் வடிவமைக்கவுள்ளோம். ஏற்கனவே ஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு படத்திலும் நாங்கள் இணைந்து பணியாற்றினோம் என்று பதிவிட்டுள்ளார்.