ஜெயம் ரவி தற்போது புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் 'கோமாளி' என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் 25 படம் குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியள்ளது. இந்த படத்தை 'ரோமியோ ஜூலியட்', போகன் ஆகிய படங்களின் இயக்குநர் லக்ஷ்மன் இயக்குகிறார்.
மேலும் இந்த படத்தை அவரது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இவர் ஜெயம்ரவியின் மனைவியின் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்துக்ககு டி.இமான் இசயமைக்கிறார்.
இவரது தயாரிப்பில் 'அடங்கமறு' என்ற படத்தில் ஜெயம்ரவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவிக்கு ஜோடியா ராஷி கண்ணா நடித்திருந்த இந்த படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார்