ஜெயம் ரவியின் 25-வது படத்தின் கதாநாயகி ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லட்சுமணன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jayam Ravi Going To Pair with Taapsee pannu

இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் டாப்சி ஜெயம் ரவியின் 25-வது படத்தில் கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகளம் படத்துக்கு பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாப்சிக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் இந்தியில் நடிக்க சென்றார்.

அங்கு தனக்கென்று முக்கியமான இடத்தை பிடித்திருக்கும் டாப்சி, தமிழில் ரீ என்ட்ரியாக ‘கேம் ஓவர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஜெயம் ரவியுடன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஜெயம் ரவியை இயக்குகிறார் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கிறார். சுஜாதா விஜயகுமார் இதற்கு முன்பாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தையும் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தில் நடிக்கும்  நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் வெளியாகும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.