இது மாதிரி இன்னும் 6 இருக்கு..! - கோமாளி டீமின் அடுத்த லுக் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் ‘கோமாளி’ திரைப்படத்தின் வித்தியாசமான 3வது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Jayam Ravi-Kajal Aggarwal's Comali 3rd look has been unveiled by RJ Balaji

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 24வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா ஹெக்டே, கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

டெக்னாலஜியின் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் விதமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. கோமா நிலையில் ஜெயம் ரவி இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து, 80-களின் லுக்கில் ஜெயம் ரவி இருக்கும் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. தற்போது ஆதிவாசி லுக்கில் உள்ள 3வது போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதேபோன்று 9 வித்தியாசமான லுக்கில் இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி தோன்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயம் ரவி நடிப்பில் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.