'கோமாளியில்' நோயாளியாக - ஜெயம் ரவி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் 'கோமாளி' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் பபோஸ்டர் வெளியாகியுள்ளது

jayam ravi kajal agarwal komali first look released

இதில் மிகவும் வித்தியாசமாக காட்சியளிக்கிறார் ஜெயம் ரவி. குறிப்பாக ஒரு நோயாளி போல் உடை அணிந்து, கையில் குளுக்கோஸ் ஏறி கொண்டிக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவரை சுற்றிலும், வாட்ஸ் ஆப், ட்விட்டர் , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் அடையாளம் இடம்பெற்றுள்ளது.

இந்த படத்தில் முதல் முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் சம்யுக்தா ஹெட்டே , கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை,  இயக்குனர்  பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். நடிகரும் இசையமைப்பாளருமான, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.