www.garudabazaar.com

ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்'.. OTT & சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள்! 

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.

Jayam Ravi AGILAN Movie Satellite TV OTT Rights

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "மோகன் ஜி யாருனே தெரியாது".. வி சி க தலைவர் தொல். திருமாவளவன் பரபரப்பான பதில்!

சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்ததாக அகிலன், இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படமான அகிலன் படம் தயாராகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தினை இயக்கி உள்ளார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்துள்ளனர்.

Jayam Ravi AGILAN Movie Satellite TV OTT Rights

Images are subject to © copyright to their respective owners.

சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மார்ச் 10, 2023 அன்று  வெளியாகிறது.

துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 28வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்துக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவு செய்துள்ளார், விஜய் முருகன் கலை இயக்குனராக பணிபுரிகிறார்.

Jayam Ravi AGILAN Movie Satellite TV OTT Rights

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடிடி உரிமத்தை பிரபல ஜி5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "LEO, லால் சலாம் போன்ற பட பெயர்களை மாத்தனுமா?".. தொல். திருமாவளவன் வைரல் பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi AGILAN Movie Satellite TV OTT Rights

People looking for online information on Agilan, Agilan Movie OTT Rights, Jayam Ravi, Priya Bhavani Shankar will find this news story useful.