RRR : இந்த பாட்டுல இதே கெட்டப்ல ராஜமௌலி ஆடிருக்காரா?.. நடன இயக்குநர் பகிர்ந்த செம BTS
முகப்பு > சினிமா செய்திகள்RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "பகாசூரன் படத்தை பாத்துட்டீங்களா?".. ஒரே வார்த்தையில் சட்டென்று பதில் அளித்த திருமாவளவன்!
ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.
இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார். ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு. RRR படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாக ஈட்டியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
Images are subject to © copyright to their respective owners.
கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் ஜாப்பனிஷ் மொழியில் வெளியாகி உள்ளது. ஐமாக்ஸ் 3டியிலும் இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் தற்போது கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்காருக்கு அடுத்த உலகின் மிக உயரிய விருதான கோல்டன் குளோப் விருதில் சிறந்த அயல்நாட்டு (ஆங்கில மொழி அல்லாத) திரைப்படம் மற்றும் சிறந்த பாடலுக்கான (நாட்டு நாட்டு) பிரிவுகளில் RRR திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டு, நாட்டு நாட்டு பாடல் விருது பெற்றது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இப்படத்தின் சூப்பரான BTS-ஐ இப்படத்தின் முக்கிய தொழில்நுட்பக்கலைஞர் ஒருவர் பகிர்ந்துள்ளார். ஆம், இப்படத்தின் முடிவில் இடம்பெறும் கோலே பாடலில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஆலியா பட்டுடன் இணைந்து தேசப்பற்று பாடலுக்கு நடனம் ஆடுவர். படு கமர்ஷியலாகவும் துள்ளலாகவும், அதேசமயம் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை நினைவூட்டும் வகையிலும் இருக்கும் இந்த பாடலில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து இப்படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அதே மாதிரியான நடன காஸ்டியூமில் இருக்கும் சூப்பரான BTS புகைப்படங்களை, இப்படத்தில் நடன இயக்குநர்களுள் ஒருவராக பணிபுரிந்த ஹரிகிரண் மாஸ்டர் தம்முடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
ஹரிகிரண் மாஸ்டர் பிரபாஸின் ராதே ஷ்யாம் உள்ளிட்ட பல படங்களிலும் தமிழில் முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள தண்டட்டி திரைப்படத்தில் ஹரிகிரண் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | "மோகன் ஜி யாருனே தெரியாது".. வி சி க தலைவர் தொல். திருமாவளவன் பரபரப்பான பதில்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Jr NTR Dhanush Vetrimaaran Film News Are Absolutely False
- Ram Charan Impresses Shankar With His Single Take Dance
- Ram Charan And Anand Mahindra Dance For Naatu Naatu
- Jr NTR About Update Asking By Fans In Frequent Times
- Sharwanand Engagement With Rakshitha Ram Charan Attend
- RRR Movie Rajamouli Naatu Naatu Song Nominated In Oscars 2023
- I Just Met GOD SS Rajamouli MM Keeravani Spielberg Naatu Naatu
- RRR Naatu Naatu Song Won Golden Globe Award
- Jr NTR Lakshmi Ramcharan Upasana In America For RRR Golden Globe
- RRR Naatu Naatu Song Shortlisted For The Academy Awards
- RRR Movie Nominated For Golden Globe Awards
- Ram Charan Upasana Are Expecting Their First Child
தொடர்புடைய இணைப்புகள்
- RRR உட்பட India-லருந்து 3 படங்கள்... OSCAR-ல் மிரட்டும் Indian CInema... PROUD MOMENT🔥
- തരളിത രാവും ശിശിരകാല മേഘവും...മലയാളി നെഞ്ചോട് ചേർത്ത കീരവാണിയുടെ ഈണങ്ങൾ
- நாட்டு குத்து பாடலுக்காக Golden Globe Award வாங்கிய Keeravani. சந்தோஷத்தில் எழுந்து நின்ற Rajamouli
- "ഇത് എന്റെ ഓർമ്മ ദിവസമാണ്, വീൽ ചെയറിലായ ദിവസം"|Renjith Tattoo Artist
- "എന്റെ കാര്യത്തിൽ പ്രതീക്ഷയൊന്നുമില്ല, എണീറ്റ് നടക്കുമെന്ന് ഡോക്ടർമാർ പറഞ്ഞിട്ടില്ല"|Renjith
- "നിഴലായിരുന്ന അച്ഛന്റെ വിയോഗം താങ്ങാവുന്നതിലും അപ്പുറമാണ് "|Renjith
- "ഈ ജന്മത്തിൽ ആർക്കും ഒരു ദ്രോഹവും ചെയ്തിട്ടില്ല, മുൻജന്മപാപം എന്നൊക്കെ പറയുന്നത്
- "പരീക്ഷണത്തിലൂടെയാണ് നാല് കൊല്ലമായി പോകുന്നത്, പക്ഷേ പിടിച്ചു നിന്നേ പറ്റൂ "|Renjith|Tattoo Artist
- പ്രായപൂർത്തിയാകാത്ത മകൾ അച്ഛന് കരൾ പകുത്തുനൽകാൻ തീരുമാനിച്ചത്, ഹൈക്കോടതി അനുവദിച്ചതെങ്ങനെ?
- Accident മൂലം കിടപ്പിലായിട്ടും You Tube നോക്കി പഠിച്ച് Tattoo Artist ആയ Renjith
- 'നാട്ടു നാട്ടു' ഗാനവും യുക്രൈന് പ്രസിഡന്റ് സെലന്സ്കിയും തമ്മിലെ ബന്ധമെന്ത് ?
- அப்பாவான RAM CHARAN 😍 இன்னொரு Action Hero Ready 🔥 Chiranjeevi Emotional...