www.garudabazaar.com

பிரதீப் ரங்கநாதன் Fan ஆகவே மாறி பேசிய ஜெயம் ரவி.. அகிலன் பட நிகழ்ச்சியில் சுவாரஸ்யம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. ஜெயம், தீபாவளி, பேராண்மை, தனி ஒருவன், கோமாளி உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Jayam ravi about director pradeep ranganathan agilan movie event

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரபல ஓடிடியில் RJ பாலாஜி & ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ரன் பேபி ரன்’ .. வெளியான ரிலீஸ் தேதி..!

கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் 1 வெளியாகி இருந்தது. இதில், கதையின் நாயகனாக வரும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக அகிலன் திரைப்படம், மார்ச் 10 ஆம் தேதியான்று வெளியாக உள்ளது.

Jayam ravi about director pradeep ranganathan agilan movie event

Images are subject to © copyright to their respective owners.

ஜெயம் ரவியின் அகிலன்

ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தினை இயக்கி உள்ளார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அகிலன் படத்தின் ட்ரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், அகிலன் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் குறித்து ஜெயம் ரவி பேசியுள்ள விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.

Jayam ravi about director pradeep ranganathan agilan movie event

Images are subject to © copyright to their respective owners.

பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் 'கோமாளி'. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்திருந்தார். கோமாளி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் லவ் டுடே என்ற திரைப்படத்தையும் கடந்த ஆண்டு இயக்கி நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். கடந்த ஆண்டின் பெரிய பிளாக்பஸ்டர் படம் ஆகவும் லவ் டுடே மாறி இருந்தது.

கத்தனும் போல இருக்கு

இந்த நிலையில், அகிலன் பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெயரை கூறியதும் அனைவரும் கத்த ஆரம்பிக்க, "எனக்கும் அப்படி கத்தனும் போல தான் இருக்கு. பிரதீப்போட வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கும் கத்தனும் போல இருக்கு. ஏன்னா உங்களுக்கெல்லாம் முன்னாடியே அவன் திறமையை நான் கண்டுபிடிச்சிட்டேன், பயங்கரமான ஆளுப்பா அப்படின்னு. அந்த சந்தோஷம் எனக்கு இருக்கு.

Jayam ravi about director pradeep ranganathan agilan movie event

Images are subject to © copyright to their respective owners.

நான் பிரதீப்பை கண்டுபிடிக்கல

எல்லாரும் சொல்றாங்க நான் அறிமுகம் பண்ணேன்னு. அது ஒரு பெரிய வார்த்தையே இல்லைங்க. ஹாய், இது பிரதீப் அப்படின்னா அவ்வளவு தாங்க அறிமுகம் பண்றது. நான் பிரதீப்பை கண்டுபிடிக்கல. அவன் திறமையில் அவனா வந்து இந்த மேடையை அவனா கிரியேட் பண்ணிக்கிட்டான். நான் எதுவுமே பண்ணல. அவன் திறமைசாலி, புத்திசாலி.

நான் கோமாளி சக்சஸ் மீட்லயே சொன்னேன், ப்ரொடியூசர் எல்லாருக்கும் கோல்ட் கொடுத்தாரு. சார் நீங்க எல்லாருக்கும் ஒரு கோல்ட் கொடுக்குறீங்க ஆனா எனக்கு ஒரு பிளாட்டினம் கொடுத்து இருக்கீங்க சார் அப்படின்னு நான் சொன்னேன். எப்பவுமே அந்த பாசம், நேசம் உண்மையா இருக்கும். அதே மாதிரி கத்திக்கிட்டே இருப்பேன். நிறைய நல்ல படம் பண்ணு" என இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனை பாராட்டவும் செய்திருந்தார் நடிகர் ஜெயம் ரவி.

Also Read | "தனி ஒருவன் 2 படத்தில் அரவிந்த் சாமி?".. அது எப்படி பாஸ் முடியும்?.. ஜெயம் ரவி சொன்ன சூப்பர் பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

Jayam ravi about director pradeep ranganathan agilan movie event

People looking for online information on Agilan, Agilan Movie Event, Jayam Ravi, Pradeep Ranganathan will find this news story useful.