www.garudabazaar.com

சந்திரமுகி-2 குழுவுடன் ஹோலி கொண்டாடிய நடிகை கங்கனா ரனாவத்.. வைரல் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கங்கனா ரனாவத் ஹோலி பண்டிகையை கொண்டாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Actress Kangana Ranaut celebrates Holi in Chandramuki 2 set

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "LEO, லால் சலாம் போன்ற பட பெயர்களை மாத்தனுமா?".. தொல். திருமாவளவன் வைரல் பதில்!

ஹோலி பண்டிகை

இந்தியாவே ஒரு பண்டிகை தேசம் என வெளிநாட்டினர் பலமுறை குறிப்பிடுவது உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர் நம் மக்கள். அந்த வகையில் இன்று ஹோலி பண்டிகை என்பதால் இந்தியாவே களைகட்டி இருக்கிறது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசியும் வர்ணங்கள் கலந்த நீரை ஒருவர்மீது ஒருவர் ஊற்றியும் இந்த விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர் மக்கள். குறிப்பாக வட இந்தியாவில் இந்தப் பண்டிகை பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கங்கனா ரனாவத்

இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர் கங்கனா ரனாவத். மேலும், சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். இவர், 2008 ஆம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Images are subject to © copyright to their respective owners.

'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் கங்கனா ரனாவத் பெற்றார். கடைசியாக கங்கனா ரனாவத், ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'தாகத்' படத்தில் நடித்து இருந்தார். கங்கனா ரனாவத் தனது அடுத்த படமான எமர்ஜென்சி படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்கிறார்.

இந்த எமர்ஜென்சி படத்தை கங்கனா ரனாவத்தே இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

சந்திரமுகி-2

மேலும் தமிழில் பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி-2 படத்திலும் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, மனோபாலா, ரவி மரியா ஆகியோரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கங்கனா தனக்கு சந்திரமுகி-2 குழுவினருடன் ஹோலி பண்டிகை கொண்டாடும் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "பணம் கையில் வந்தால்தான் நிஜம்".. இயக்குநர் செல்வராகவனின் வைரல் போஸ்ட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Kangana Ranaut celebrates Holi in Chandramuki 2 set

People looking for online information on Chandramuki 2, Chandramuki 2 set, Kangana Ranaut, Kangana Ranaut celebrates Holi will find this news story useful.