www.garudabazaar.com

"தனி ஒருவன் 2 படத்தில் அரவிந்த் சாமி?".. அது எப்படி பாஸ் முடியும்?.. ஜெயம் ரவி சொன்ன சூப்பர் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. ஜெயம், தீபாவளி, பேராண்மை, தனி ஒருவன், கோமாளி உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Jayam ravi about aravind samy in thani oruvan 2 movie

Images are subject to © copyright to their respective owners.

Also Read | The Legend : "தி லெஜண்ட் திரைப்படத்திலும் விழிப்புணர்வு மெசேஜ்..".. கலங்கவைத்த மறைந்த நடிகர் விவேக்..!

கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் 1 வெளியாகி இருந்தது. இதில், கதையின் நாயகனாக வரும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக அகிலன் திரைப்படம், மார்ச் 10 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.

Jayam ravi about aravind samy in thani oruvan 2 movie

Images are subject to © copyright to their respective owners.

ஜெயம் ரவியின் அகிலன்

ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தினை இயக்கி உள்ளார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அகிலன் படத்தின் ட்ரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Jayam ravi about aravind samy in thani oruvan 2 movie

Images are subject to © copyright to their respective owners.

ட்ரைலர் வெளியீட்டு விழா

அப்படி ஒரு சூழலில், அகிலன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்திருந்தது. இதில், தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் ஜெயம் ரவி  பேசியுள்ள விஷயங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தனி ஒருவர் இரண்டாம் பாகம்

ஜெயம் ரவியின் சகோதரரும் இயக்குனருமான ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் தனி ஒருவன். ஜெயம் ரவி நடிப்பு பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக தனி ஒருவன் அமைந்திருந்த சூழலில், பெரிய வெற்றியும் பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜெயம் ரவி மற்றும் அரவிந்த்சாமி ஆகிய இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டிருந்த சூழலில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Jayam ravi about aravind samy in thani oruvan 2 movie

Images are subject to © copyright to their respective owners.

தனி ஒருவன் 2 ல அரவிந்தசாமியா?

அப்படி இருக்கையில் சமீபத்தில் இது குறித்து பேசி இருந்த இயக்குனர் மோகன் ராஜா, தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் இல்லையென்றால் அடுத்த வருடம் கண்டிப்பாக வரும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அகிலன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தனி ஒருவன் 2 பற்றி பேசியிருந்த நடிகர் ஜெயம் ரவி, நிகழ்விற்கு வந்திருந்த அண்ணன் மோகன் ராஜாவை குறிப்பிட்டு "தனி ஒருவன் 2, 2024 வருதுன்னு தைரியமா சொல்லிட்டாரு. எதிர்பார்த்துட்டு இருக்கோம்" என தெரிவித்ததும் தனி ஒருவன் 2 -வில் அரவிந்த்சாமி வேண்டும் என கேட்கப்பட இது பற்றி தனது அண்ணனிடம் கேட்கும் ஜெயம் ரவி, "தனி ஒருவன் 2 -லயும் அரவிந்த்சாமி வேணுமாம். அவங்களுக்கு என்ன அண்ணா பண்ணலாம்?. என கேட்டுவிட்டு "அவர் ஏதாவது ஒன்னு கிரியேட்டிவா பண்ணுவாரு கவலைப்படாதீங்க. அவர் பயங்கரமான மூளைக்காரர்" என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | சானியா மிர்சா & மகேஷ் பாபுவுடன் A.R. ரஹ்மான் செல்ஃபி..! இணையத்தை கலக்கும் வைரல் போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Jayam ravi about aravind samy in thani oruvan 2 movie

People looking for online information on Aravind samy, Jayam Ravi, Thani Oruvan, Thani oruvan 2 movie will find this news story useful.