சூர்யா-மோகன்லாலின் மிரட்டலான நடிப்பில் ‘காப்பான்’ டீசர் இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா, மோகன்லால் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Suriya and Mohanlal starrer 'Kaappaan' teaser has been released

லைகா நிறுவனம் தயாரிப்பில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை 7 மணிக்கு ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் பிரதமராக மோகன்லாலும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

இந்த தமிழ் புத்தாண்டு சிறப்பாக சூர்யா நடிக்கும் 3 திரைப்படங்களின் முக்கிய அறிவிப்புகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘என்.ஜி.கே’ படத்தின் முதல் பாடல் ரிலீசான நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரைப் போற்று’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது.

தற்போது அதைத் தொடர்ந்து ‘காப்பான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா-மோகன்லாலின் மிரட்டலான நடிப்பில் ‘காப்பான்’ டீசர் இதோ..! வீடியோ