சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த சூப்பர் அப்டேட் இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா, மோகன்லால் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Suriya’s 'Kaappaan' will be releasing on August 30

லைகா நிறுவனம் தயாரிப்பில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் பிரதமராக மோகன்லாலும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். காப்பான் திரைப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ படத்தின் முதல் பாடல் ரிலீசான நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரைப் போற்று’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.