மக்கள் செல்வனுடன் ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்தின் தலைப்பு இதுவா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் ‘லாபம்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

Vijay Sethupathi and Shruti Haasan to team up with director S P Jananathan for Laabam

‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட அறமும் அரசியலும் சார்ந்த படங்களை தந்து தேசிய விருது வென்ற இயக்குநரெஸ்.பி.ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார்.

விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திர்கு ‘லாபம்’ என தலைப்பிட்டுள்ளனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று ராஜபாளையத்தில் தொடங்கியது. அதிரடி ஆக்ஷனுடன் நல்ல கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது சிறிய இடைவெளிக்குப் பின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் ‘லாபம்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.