நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 38’ திரைப்படத்தின் இசை குறித்த முக்கிய அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 38’ திரைப்படத்திற்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசை குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே Behindwoods தளத்திடம் அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருந்தார். சூர்யா-38 ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே ஜி.வி.பிரகாஷ் இசையை முடித்துவிட்டார்.
இதுவரை தன் இசையில் இல்லாத ஒரு விஷயம் இந்த படத்தில் இருப்பதகாவும், இது தாறுமாறான கூட்டணியாக இருக்கும் எனவும் ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘சூர்யா-38’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சூர்யாவும் ஏற்கனவே இப்படத்தின் இசையை கேட்டு மெய்சிலிர்த்துப் போனதாக கூறியிருந்த நிலையில், சூர்யா-ஜி.வி.பிரகாஷ் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
Will announce the first audio collaboration of #Suriya38 day after tomm ... 🔥🔥🙌🏻
— G.V.Prakash Kumar (@gvprakash) April 5, 2019