“என் கெரியருக்கு ஏத்த திரைப்படம்..!” - கமல் படத்தின் டைட்டிலை சொன்ன கிரிக்கெட் வீரர் அஸ்வின்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 12, 2019 12:35 PM
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் ரவிச்சந்திரன், தனது கிரிக்கெட் கெரியரை விளக்கும் வகையிலான திரைப்படத்திற்கு ஏற்ற டைட்டிலை ரசிகரின் வேண்டுகோளையடுத்து பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடி வந்த அஸ்வின், அடுத்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடஸ் அணிக்கு விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் #AskAsh என்ற ஹேஷ்டேக் மூலம் கடந்த நவ.10ம் தேதி ரசிகர்களிடம் அஸ்வின் ரவிச்சந்திரன் உரையாடினார். அதில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அஸ்வின் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களது கிரிக்கெட் கெரியரை விவரிக்கும் விதமாக ஒரு திரைப்பட தலைப்பு ஒன்றை பகிருங்கள் என்றார்.
அதற்கு பதிலளித்த அஸ்வின், ‘இதை எப்படி ட்விட்டரில் சொல்ல முடியும்’ என அஸ்வின் கேட்க, அந்த ரசிகர் சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ போல என எடுத்து காட்டிற்காக கூறினார். இதையடுத்து, அஸ்வின் தனது கிரிக்கெட் கெரியருக்கு ஏற்ற திரைப்பட தலைப்பு இதுவாக தான் இருக்க முடியும் என்ற தொனியில், ‘கடமை கன்னியம் கட்டுப்பாடு’ என்ற திரைப்பட தலைப்பை பகிர்ந்தார்.
முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை அவர்களின் தாரக மந்திரமான ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் சத்யராஜ் ஹீரோவாக நடிக்க அந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Kadamai ganniyam kattupaadu 😂😂😂
— Ashwin Ravichandran (@ashwinravi99) November 10, 2019