''தீரன் ! என் மகன் தேசிய அளவுல சாதிச்சுட்டான்'' - மகிழ்ச்சியில் அப்பா சிபிராஜ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சத்யா' படத்துக்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் 'கபடதாரி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெயினெர்ஸ் மற்றும் டிஸ்டியூபியூட்டர்ஸ் சார்பாக தனஞ்செயன் தயாரிக்கிறார்.

Sibi Sathyaraj shares his son's Achievements in National Competition

இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ், பூஜா குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு சைமன் கே கிங் இசையமைக்க, ரசமதி ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்துக்கு இயக்குநர் ஜான் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் இணைந்து திரைக்கதை வசனங்கள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகன் குறித்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''என் மகன் தீரன் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான Taekwondo championship 2019 போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளான்.  இதனை பகிர்ந்து கொள்வதில் உச்சகட்ட மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது'' என்று குறிப்பிட்டு தன் மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து சிபி சத்யராஜிற்கு பிரபலங்கள் வாழத்து தெரிவித்து வருகின்றனர்.