'மாறா...' - சூர்யாவின் 'சூரரைப் போற்று' பட டீஸர் குறித்து தகவல் சொன்ன ஜி.வி.பிரகாஷ்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 12, 2019 11:59 AM
சூர்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான படம் 'காப்பான்'. லைக்கா புரொடக்ஷன் தயாரித்திருந்த இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குனீத் மோங்காவுடன் இணைந்து சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.
இந்த படத்தில் அபர்ணா முரளி, கருணாஸ், ஊர்வசி, ஜாக்கி ஷ்ரோஃப் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்பெஷல், சூரரைப் போற்று படத்தின் டீஸருக்காக ஸ்பெஷல் தீம் சாங் கமபோஸ் செய்துள்ளேன், Mara will Rise soon என்று குறிப்பிட்டுள்ளார்.
A special theme is being composed for the teaser of #SooraraiPottru ... it wil be called as #Maara ... #maara will rise soon ... 🔥🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) November 12, 2019