''தளபதி' டைட்டில் கேட்டு நல்லா இல்லனு சொன்னேன்'' - கமல் சொன்ன சுவாரஸியத் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் மற்றும் அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக 3 நாள் நிகழ்வு அறிவிக்கப்பட்டது.  நேற்று தன் குடும்பத்தினருடன் பரமக்குடி சென்ற கமல், அங்கு தன் தந்தையின் சிலையை திறந்து வைத்தார்.

Kamal Haasan Speaks about Rajinikanth and Maniratnam

அதனைத் தொடர்ந்து 2 ஆம் நாளான இன்று தனது திரையுலக குருவான பாலசந்தரின் திருவுருவச் சிலையினை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திறந்து வைத்தார்.

அப்போது உடன் வைரமுத்து, கே.பாலச்சந்திரின் மகளும் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி, மணிரத்னம், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன், நாசர், ரமேஷ் அரவிந்த், இயக்குநர் சந்தான பாரதி, ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய கமல், மணிரத்னம் குறித்து புகழ்ந்து பேசினார். அப்போது மணிரத்னத்தின் மீது எனக்கு எந்த அளவுக்கு வியப்பு இருந்தோ, அதே வியப்பு ரஜினிக்கும் இருந்தது.  அப்போது ஒரு நிகழ்ச்சி ஒன்றில் நானும் ரஜினியும் கலந்து கொண்டிருந்தோம்.  ரஜினி என்னிடம் தளபதி டைட்டில் எப்படி இருக்கிறது என்று கேட்டார்.

விழாவின் சத்தத்தில் அது எனக்கு கணபதி என்று கேட்டது. நான் அவரிடம் நான் நல்ல இல்லிங்க. விநாயகர் சதுர்த்தி மாதிரி இருக்கும்ங்க என்றேன். அதற்கு ரஜினி அதிர்ச்சியானார். பின்னர் தான் அது தளபதி என்று தெளிவுபடுத்தினார். என்று பேசினார்.

''தளபதி' டைட்டில் கேட்டு நல்லா இல்லனு சொன்னேன்'' - கமல் சொன்ன சுவாரஸியத் தகவல் வீடியோ