ராஜ்கமல் நிறுவனத்தின் 50வது படம் பிக்பாஸ் தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக 'ராஜ பார்வை', 'தேவர்மகன்', 'அபூர்வ சகோதரர்கள்', 'ஹேராம்' உள்ளிட்ட படங்களை நடித்துள்ளார். மேலும் தனது படங்கள் மட்டுமல்லாமல் பிற ஹீரோக்களின் படங்களையும் அவர் தயாரித்திருந்தார்.

Kamal Haasans Raaj Kamal films international announces their 50th film

குறிப்பாக சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', மாதவன் நடித்த 'நள தமயந்தி', விக்ரம் நடித்த 'கடாராம் கொண்டான்' உள்ளிட்ட படங்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வெளியாகியிருந்தது.

இதன் ஒரு பகுதியாக பிக்பாஸ் இறுதிப் போட்டியில் ராஜ்கமல் சார்பாக தர்ஷன் ஹீரோவாக நடிக்க ஒரு படத்தை தயாரிக்கவிருப்பதாக கமல் அறிவித்தார். இந்நிலையில் இன்று (நவம்பர் 7) புதிய ராஜ்கமல் அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையை ரஜினியும் கமலும் இணைந்து திறந்து வைத்தனர்.

நிகழ்வில் பேசிய கமல், ராஜ்கமலின் 50 வது படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளோம். அதில் நான் நடிக்கவேண்டும் என்பதில்லை. அந்த அளவிற்கு ராஜ்கமலை நீங்கள் வளர்த்திருக்கிறீர்கள் என்று பேசினார்.  ஏற்கனவே ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் தர்ஷன் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாக கமல் தெரிவித்துள்ள நிலையில், ராஜ்கமலின் 50வது படம் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.