“எனக்கு 'கைதி' பிடிச்சிருந்தது..!” - பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 11, 2019 03:53 PM
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் ரவிச்சந்திரன் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படம் குறித்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடி வந்த அஸ்வின், அடுத்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடஸ் அணிக்கு விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் #AskAsh என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார். அதில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அஸ்வின் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் சமீபத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது என கேட்டபோது, அதற்கு பதிலளித்த அஸ்வின், ‘கைதி. மிகவும் பிடித்திருந்தது’ என கூறியிருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தில் நடிப்பில் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியான ‘கைதி’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய அப்பா-மகள் பாசத்தை பேசும் இப்படத்தில் கார்த்தியுடன் அஞ்சாதே நரேன், விஜய் டிவி தீனா, மரியம் ஜார்ஜ், ஹரிஷ் உத்தமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார்.
Kaithi and loved it
— Ashwin Ravichandran (@ashwinravi99) November 10, 2019