போரடிச்சா பாக்குற படத்துல இதுவும் ஒன்னு..! சுமார் 40 முறை கமல் படத்தை பார்த்து ரசித்த ரஜினி!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 08, 2019 12:06 PM
உலக நாயகன் கமலஹாசனின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7 அன்று கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிகழ்வையும் சேர்த்து 3 நாட்கள் நிகழ்வாக கொண்டாடப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன் படி நேற்று (நவம்பர் 7) தன் குடும்பத்தினருடன் பரமக்குடி சென்ற கமல்ஹாசன் தனது தந்தை D.சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் தன் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் நிகழ்வின் 2 ஆம் நாளான இன்று தனது திரையுலக குருவான பாலசந்தரின் திருவுருவச் சிலையினை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலசந்தர் குறித்தும் கமல் குறித்தும் பாராட்டி பேசினார். பாலசந்தரின் செல்ல குழந்தை கமல் தான் என்றும், பாலசந்தருடன் பழகிய நாட்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது என்றும் கூறினார். பின்னர், நடிகர் கமல் குறித்து பேசிய ரஜினி, கமலின் ஹேராமை 40 தடவைக்கும் மேல் பார்த்ததாகவும், ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த தேவர்மகன் படம் ஒரு காவியம் என்றும் பேசினார். மேலும், கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்து இரவு நேரத்தில் நேரில் சென்று பாராட்டியதாகவும் ரஜினி கூறினார்.