சிரஞ்சீவியின் "சைரா நரசிம்மா ரெட்டி" டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 17, 2019 03:25 PM
சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், தமன்னா ஆகியோர் நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா, தனது தந்தை சிரஞ்சீவி நடிப்பில், மிகுந்த பொருட்செலவில் ‘சைரா நரசிம்மஹ ரெட்டி’என்ற படத்தை தயாரித்து வருகிறார். சுரேந்தர் ரெட்டி இயக்கி வரும் இந்த படம் தெலுங்கு, தமிழில் நேரடியாகவும், இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வரவுள்ளது
மெகாபட்ஜெட்டில் பல நாட்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை சிரஞ்சீவியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தில் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
பாலிவுட் அமிதாப் பச்சன், கன்னட நடிகர் சுதீப், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு முக்கிய கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா மற்றும் தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
பிரிட்டிஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த முதல் புரட்சியை பற்றின கதை. இதுவரை வரலாற்றில் போற்றப்படாத ஒரு உண்மையான ஹீரோவை பற்றின கதை தான் சயீரா நரசிம்ம ரெட்டி. தெலுங்கு படம் என்றாலே மாஸ் என்று அனைவருக்கும் தெரியும். அதுவும் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிப்பதால் அந்தப் படத்தில் டான்ஸ், ஃபைட் என அனைத்துமே பட்டையை கிளப்பும் என்பதால், சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி. இந்தி திரையுலகில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
Trailer releases tomorrow! #SyeRaaNarasimhaReddy pic.twitter.com/i1c0PdEJDQ
— Excel Entertainment (@excelmovies) September 17, 2019