www.garudabazaar.com

"ரொம்ப அதிர்ச்சியா இருக்கு!".. KV ஆனந்த்-ன் ஆஸ்தான மியூசிக் டைரக்டர் ஹாரிஸ் ஜெயராஜ் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

extremely shock RIP my friend KV Anand Harris Jayaraj

அயன், கோ, மாற்றான், அனேகன், கவன், காப்பான் என கே.வி.ஆனந்த் இயக்கிய படங்கள் எல்லாவற்றுக்கும் பெரும்பாலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பார்.

extremely shock RIP my friend KV Anand Harris Jayaraj

இவரின் இயக்கத்தில் உருவான பெரும்பாலான படங்கள் ஹிட் படங்கள் என்பதோடு இவர் படங்களின் பாடல்களும் ஹிட் பாடல்களாகவே அமைந்தன. இந்நிலையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

extremely shock RIP my friend KV Anand Harris Jayaraj

தமது ட்வீட்டில், ஹாரிஸ் ஜெயராஜ், இதுகுறித்து,  “மிகவும் அதிர்ச்சியாக உள்ளது மற்றும் இந்த உடைந்து போகச்செய்யக் கூடிய செய்தியைக் கேட்பது துரதிர்ஷ்டவசமானது. என் நண்பர் கே.வி.ஆனந்த் ஆத்மா சாந்தி அடையட்டும்.!” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் தொடக்கத்தில் பத்திரிகை மற்றும் வார, மாத இதழ்களில் புகைப்பட கலைஞர்களாக இருந்த கே.வி.ஆனந்த் தம்முடன் தொடக்க காலத்தில் இணைந்து பணிபுரிந்த இரட்டை எழுத்தாளர்கள் சுபாவின் கதைகளை பின்னாட்களில் படமாக்கி வெற்றிகளைப் பெற்றார். எழுத்தாளர்களிடம் இருந்து கதைகளை வாங்கி படமெடுத்து அவர்களுக்கு அங்கீகாரம் தந்துள்ள இயக்குநர் என்கிற பெருமை இவருக்கு உண்டு.

இந்நிலையில் கே.வி.ஆனந்தின் மறைவுக்கு அவரது ஆஸ்தான இரட்டை எழுத்தாளர்களுள் ஒருவரான சுரேஷ் சுபா, “கே.வி.ஆனந்த் பற்றிய இந்த செய்தி முழுவதுமாக உடைந்து போகச் செய்கிறது. கண்ணீருடன்” என பதிவிட்டுள்ளார்.

ALSO READ: "இன்னும் எவ்வளவு தாங்குவது இறைவா!".. கே.வி.ஆனந்த் மறைவுக்கு பிரபலங்களின் உருக்கமான இரங்கல்கள்!

extremely shock RIP my friend KV Anand Harris Jayaraj

People looking for online information on Harris Jayaraj, KV Anand, RIPKVAnand will find this news story useful.