RRR Others USA
www.garudabazaar.com

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘லெஜெண்ட்’ படத்தின் first single…. வெளியான தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான லெஜண்ட் சரவணா நடிக்கும் புதிய படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

Harris jayaraj musical legend movie first single update

போடு! மாநாடு படத்தின் பிரபல வசனத்தை title ஆக வைத்த 'தில்லுக்கு துட்டு' இயக்குனர்!

விளம்பரம் to சினிமா….

தன் சொந்த நிறுவமான சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படங்கள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் அடைந்தவர் லெஜண்ட் அதிபர் அருள் சரவணன். இந்த புகழைத் தொடர்ந்து தற்போது சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் நடிப்பில் ஜேடி –ஜெர்ரி இரட்டையர்கள் இயக்கும் புதிய படத்துக்கு லெஜண்ட் என்றே பெயர் வைக்கபப்ட்டுள்ளது. ஜேடி – ஜெர்ரி இதற்கு முன்னர் உல்லாசம் மற்றும் விசில் ஆகிய படங்களை இயக்கியவர்கள். அதன் பிறகு நூற்றுக்கணக்கான விளம்பர படங்களை இயக்கியவர்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களையும் அவர்களே இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Harris jayaraj musical legend movie first single update

படத்தில் இணைந்த முன்னணிக் கலைஞர்கள்….

லெஜண்ட் படத்தில் சரவணாவுக்கு ஜோடியாக ரித்திகா திவாரி நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி ரூபன் எடிட்டிங் பணியை செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் சிங்கிள் பாடல்…

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகின. மோஷன் போஸ்டரில் ஹாரிஸ் ஜெயராஜின் இசை கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Harris jayaraj musical legend movie first single update

இது சம்மந்தமாக வெளியான போஸ்டர் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது. சமீபகாலமாக ஹாரிஸ் இசையில் எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த அறிவிப்பு அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் பாடல்களை தமிழ் சினிமாவின் முன்னணி பாடல் ஆசிரியர்களான  வைரமுத்து, சிநேகன், பா. விஜய், சிநேகன், கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இளையராஜா யுவன் இசையில் மாமனிதன்…. இசை வெளியீடு எங்கு? எப்போது? Viral போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Harris jayaraj musical legend movie first single update

People looking for online information on Harris Jayaraj, JD, Legend Movie, Legend movie first single update, Saravanan Arul will find this news story useful.