#D43 - தனுஷ் - கார்த்திக் நரேன் படம் : முக்கியமான அப்டேட் சொன்ன ஜி.வி.பிரகாஷ்..!
முகப்பு > சினிமா செய்திகள்தனுஷ் - கார்த்திக் நரேன் படம் குறித்து முக்கியமான தகவலை ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ் தற்போது நடிக்கவிருக்கும் படம் D43 என அழைக்கப்படுகிறது. துருவங்கள் பதினாறு, மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். ஜிவிபிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தனுஷின் பட்டாஸ் படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த முக்கியமான தகவலை இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், 'D43 படத்திற்காக 2 ட்யூன்களை லாக் செய்துவிட்டோம். மிகவும் எக்சைட்டிங்கான ஒருவர் இப்பாடலை எழுதவுள்ளார்' என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் அது யாராக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
2 tunes locked for #D43 ... and somebody exciting is going to write the lyrics 🔥🔥 @dhanushkraja ... @karthicknaren_M @SathyaJyothi_
— G.V.Prakash Kumar (@gvprakash) March 7, 2020