புதுப்பேட்டை-2, ஆயிரத்தில் ஒருவன்-2, ராயன்..? - அடுத்து இதுதான்.! - செல்வராகவன் Statement.
முகப்பு > சினிமா செய்திகள்செல்வராகவன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படைப்புகள் மூலம் கவனத்தை ஈர்த்தவர் செல்வராகவன். இவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும் இவரின் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடைசியாக இவர் சூர்யாவை வைத்து என்.ஜி.கே படத்தை இயக்கினார்.
இந்நிலையில் செல்வராகவன் தனது அடுத்த படம் குறித்து தெரிவித்துள்ளார். ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட அவர், 'அடுத்த நான் பண்ண போற படம் தனுஷுடன். அது புதுப்பேட்டை-2' என அவர் தெரிவித்துள்ளார். மிக நீண்ட நாட்களாக புதுப்பேட்டை-2க்காக எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, செல்வராகவனின் இந்த தகவல் உற்சாகத்தை அளித்துள்ளது.
So most most expected part 2 movie in Tamil cinema #Pudhupettai is Confirmed as @selvaraghavan sirs next. pic.twitter.com/vFzrO3rz7b
— R Vasanth (@rvasanth92) March 6, 2020