இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் வாட்ச்மேன் . இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு ஆகியோர் முக்கிய வடேங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பாக அருள்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட் செய்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய ஜி.வி.பிரகாஷ், விஜய் தான் என்னை திரையில் முதன் முதலாக தோன்ற வைத்தவர். 'தலைவா' படத்தில் தளபதியுடன் ஒரு பாடலில் ஆட வைத்தார். 'நாச்சியார்' படத்தில் என் நடிப்பை பார்த்து தான் இந்த படத்தில் நடிக்க கேட்டார்.
அவர் இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 'வாட்ச்மேன்' படம் காமெடியுடன் கூடிய திரில்லர் படமாக இருக்கும். தண்ணீர் கேன் போடும் பையனான நான் இரவில் ஒரு வீட்டுக்குள் போகிறேன். அந்த பங்களாவில் இருப்பவர்கள், நடக்கும் சம்பவங்களை கொண்டு படம் நகரும். புருனோ என்ற நாய் படம் முழுக்க வரும். அது செய்யும் சாகசங்கள் பிரமிக்க வைக்கும். என்றார்.