'பேட்ட' படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி நிவேதாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும், இன்னும் இந்த தகவல் இறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
நிவேதா தாமஸ் ஏற்கனவே பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது வேடம் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.