தலைவர் 167- ரஜினிக்கு வில்லன் இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 167’ திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SJ Suryah is not a part of Rajinikanth-A.R.Murugadoss's Thalaivar167

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 167’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் ஏப்.10ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கவிருப்பதாக ஊடங்களில் செய்தி வெளியாகின.

இதனை நடிகர் ரஜினியின் பிஆர்ஓ மறுத்துள்ளார். அவரது ட்வீட்டில், இது வெறும் வதந்தி எனவும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா ‘தலைவர் 167’ திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நடிகை நிவேதா தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க மும்பை பின்னணியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.