www.garudabazaar.com

"எது கொழம்புல போட்ட மீன் எந்திருக்குமா?".. அமுதவாணனை தன் ஸ்டைலில் கலாய்த்த GP முத்து..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் மீன் குழம்பு வைப்பது பற்றி GP முத்து சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும்போது, அமுதவாணன் கமெண்ட் அடிக்க, தன்னுடைய ஸ்டைலில் கலாய்க்கிறார் முத்து.

GP Muthu Talk to the BB6 contestants about Fish Curry making

Also Read | ரச்சிதா, ஜனனி கூட ஜிபி முத்துவின் "Two Two Two".. "டான்ஸ்ன்னு வந்தாலே தலைவன் தனிரகம் தான்

கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 பல்வேறு திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. தினந்தோறும் பல்வேறு வேடிக்கையான விவாதங்கள், சுவாரஸ்யமான டாஸ்க்குகள் என பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது. இதன் காரணமாக மக்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

GP Muthu Talk to the BB6 contestants about Fish Curry making

பிக்பாஸ் வீட்டுக்குள் எப்போதும் ஜாலியாக வலம்வரும் GP முத்து தற்போது வீட்டின் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கலகலப்பான பேச்சும், வெள்ளேந்தியான குணமும் GP முத்துவுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இதனாலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் செய்யும் வினோதமான நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றன.

GP Muthu Talk to the BB6 contestants about Fish Curry making

வழக்கமாக கலகலப்புடன் இருக்கும் GP முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் போட்டிகளிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுகிறார். அதே வேளையில் சக போட்டியாளர்களுடன் பரிவுடனும், தனக்கே உரித்தான பாணியிலும் பேசிவருகிறார். இந்நிலையில், கார்டன் பகுதியில் அமுதவாணன், ஜனனி ஆகிய போட்டியாளர்களுடன் GP முத்து மீன் குழம்பு வைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.

GP Muthu Talk to the BB6 contestants about Fish Curry making

அப்போது முத்து, "மீன் வெந்த உடனே" எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அருகில் இருந்து இதை கேட்டுக்கொண்டிருந்த அமுதவாணன்,"மீன் எந்திரிச்சிடுமா?" என ஜாலியாக கேட்கிறார். இதனால் திகைத்துப்போன முத்து அவரை பார்த்து,"எது எந்திரிக்குமா?..நீ வைக்குற குழம்புல உள்ள போட்ட மீன் உயிரோட எந்திரிக்குமா?" என தன் ஸ்டைலில் கேட்கிறார். இதனால் அருகில் இருந்த அனைவரும் சிரிக்க, "கெளுத்தி மீன் எந்திருக்கும்ல" என்கிறார் அமுதவாணன். அதை கேட்டவாறே முத்து மீன் குழம்பு மேக்கிங் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.

 

Also Read | பாராசூட்டில் இருந்து Cute ah குதித்த நஸ்ரியா.. த்ரில் தருணம்! வைரலாகும் SKY DIVE போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu Talk to the BB6 contestants about Fish Curry making

People looking for online information on Amudhavanan, BB6 contestants, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Vijay tv will find this news story useful.