Bigg Boss 6 Tamil : “பிச்சை எடுத்துடுவேன்னு பயந்து என் அம்மா”.. ஷிவின் கணேசனின் கண்ணீர் கதை.!
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளராக தங்களுடைய கதையை சொல்லக்கூடிய நடைபெற்று வருகிறது. முந்தைய சீசன்களை போல் அல்லாமல், போட்டியாளர்கள் தங்களுடைய கதைகளை முழுமையாக செல்லக்கூடிய வாய்ப்பு இந்த முறை இல்லை. இந்தமுறை போட்டியாளர்கள் சொல்லக்கூடிய கதை சுவாரசியமாகவும் இன்ஸ்பிரேஷனாகவும் இல்லை என்று ஒருவர் கருதினால் உடனடியாக வந்து பஸ்ஸரை பிரஸ் பண்ணுவதன் மூலம், தங்களுடைய அதிருப்தியை தெரிவிக்கலாம். அப்படி 3 போட்டியாளர்கள் பஸ்ஸரை அழுத்திவிட்டால், கதை சொல்பவர் தங்களுடைய கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அந்தவகையில் இதற்கு முன்பாக ஜனனி, ADK, அசீம் ஆகியோர் கதை சொல்லும்போது மற்றவர்கள் தடுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து தனலட்சுமி மற்றும் நிவாஷினி கதைகளை அனைவரும் தொடர்ந்து கேட்டனர். இதில் ஷிவின் தன் கதையை சொல்லியிருக்கிறார், அதில், “என் அம்மா எனக்கு வேலையே கிடைக்காது.. எங்கேயாவது நான் பிச்சை எடுத்து விடுவேன்னு பயந்துதான் என்னை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார்கள்.
நானும் எந்த தவறும் செய்யவில்லை, என்னுடைய அம்மாவும் எந்த தவறும் செய்யவில்லை, என்னுடைய இந்த பாலின பிரச்சினையால் அவரை விட்டு நான் பிரிந்திருக்கிறேன். நிச்சயமாக இந்தியா திரும்ப வருவேன், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னேன்.. ஆனால் அத்துடன் அம்மா என்னிடம் பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.. பாசம் இல்லாமல், படிப்பு இல்லாமல், தவித்துக் கொண்டிருக்கும் என்னை போன்ற பலரின் நிலைமை மாறவேண்டும் என்றால், அவர்கள் கதைகளும் இந்த சமூகத்தில் கேட்கப்பட வேண்டும் என்று நினைத்து நான் எடுத்த ஒரு பெரிய முடிவுதான் பிக் பாஸ்!” என்று ஷிவின் கண்கலங்கி கூறியுள்ளார்.