www.garudabazaar.com

ரச்சிதா, ஜனனி கூட ஜிபி முத்துவின் "Two Two Two".. "டான்ஸ்ன்னு வந்தாலே தலைவன் தனிரகம் தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

GP Muthu dance with rachitha and janani in biggboss 6 tamil

Also Read | Bigg boss 6 tamil : பேசப் பேச அடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. பிக்பாஸின் விறுவிறு கதை சொல்லும் Task-ல் நடப்பது என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது.

இதனிடையே, தொடர்ந்து கலகலப்பாக இருந்து வந்த ஜிபி முத்து திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு போக வேண்டும் என அழுது புலம்பி கொண்டிருப்பது தொடர்பான விஷயம், போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

GP Muthu dance with rachitha and janani in biggboss 6 tamil

இதன் பின்னர், அவரை சக போட்டியாளர்கள் உள்ளிட்டோர் தேற்றி இருந்தனர். தொடர்ந்து, பிக்பாஸ் கூட ஜிபி முத்துவை Confession ரூமுக்குள் அழைத்து சமரசம் செய்திருந்தது. இதன் பின்னர், தனது நிலையில் இருந்து மீண்டு வந்துள்ள ஜிபி முத்து, முன்பு போல போட்டியாளர்களிடம் சகஜமாக பழகி வருகிறார்.

மீண்டும் கலகலப்பாக ஜிபி முத்துவும் இயங்கி வருவதால் ரசிகர்களும் உற்சாகத்துடன் அவர் செய்யும் விஷயங்களை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது ஜிபி முத்து நடனமாடுவது தொடர்பான வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது இரண்டு போட்டியாளர்கள் என பிரிக்கப்பட்டு டான்ஸ் போட்டிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதில், ஏற்கனவே சொடக்கு மேல சொடக்கு போடுது பாடலுக்கு முழு எனர்ஜியுடன் ஜிபி முத்து நடனமாடி இருந்தார்.

GP Muthu dance with rachitha and janani in biggboss 6 tamil

இதனையடுத்து, ரச்சிதா மற்றும் ஜனனி ஆகியோர், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் "Two Two Two" பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்தனர். அந்த பாடலில் நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆடுவது போன்ற காட்சிகள் வரும். அதே போல, ரச்சிதா மற்றும் ஜனனி ஆடிக் கொண்டிருக்க, ஜிபி முத்துவை கீழே இறங்கி ரச்சிதா மேடையில் அழைத்து வருகிறார்.

பின்னர், விஜய் சேதுபதி கதாபாத்திரம் ஆடுவது போல ஜிபி முத்து மேடையில் என்ட்ரி  கொடுத்து இருவருக்கும் இடையே நின்று ஆடவும் செய்கிறார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Also Read | Bigg Boss 6 Tamil : "எவ்ளோ பெரிய ஆளு".. அமுதவாணன் எனக்கு அசிஸ்டென்ட்டா?.. பதறிய ஜிபி முத்து!!

ரச்சிதா, ஜனனி கூட ஜிபி முத்துவின் "TWO TWO TWO".. "டான்ஸ்ன்னு வந்தாலே தலைவன் தனிரகம் தான் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu dance with rachitha and janani in biggboss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Janany, Rachitha, Vijay tv will find this news story useful.