bigg boss 6 tamil : “எவ்ளோ லட்சம் வேணா வாங்கிக்க .. என் குழந்தை வேணும்” - அழுதபடி தன் கதையை சொன்ன அசீம்.!
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளராக தங்களுடைய கதையை சொல்லக்கூடிய நடைபெற்று வருகிறது. முந்தைய சீசன்களை போல் அல்லாமல், போட்டியாளர்கள் தங்களுடைய கதைகளை முழுமையாக செல்லக்கூடிய வாய்ப்பு இந்த முறை இல்லை. இந்தமுறை போட்டியாளர்கள் சொல்லக்கூடிய கதை சுவாரசியமாகவும் இன்ஸ்பிரேஷனாகவும் இல்லை என்று ஒருவர் கருதினால் உடனடியாக வந்து பஸ்ஸரை பிரஸ் பண்ணுவதன் மூலம், தங்களுடைய அதிருப்தியை தெரிவிக்கலாம். அப்படி 3 போட்டியாளர்கள் பஸ்ஸரை அழுத்திவிட்டால், கதை சொல்பவர் தங்களுடைய கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இதில் சீரியல் நடிகர் அசீம் தன்னுடைய கதையை சொன்னார். அதில், "நான் சினிமாவில் இருக்கிறேன் என தெரிந்து தான் என்னை கல்யாணம் செய்து கொண்டார்கள். திடீரென வந்த Misunderstanding. அதன் முன்பு எனது குழந்தை முக்கியம் என எனக்கு பட்டது" என அவர் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே, சக ஹவுஸ்மேட்கள் பஸ்ஸரை அழுத்தி நிறுத்த வைத்துவிட்டனர். அதையும் அசீம் ஸ்போர்டிவாக எடுத்துக்கொண்டு, “அடப்பாவிகளா. இன்னும் ஆரம்பிக்கவே இல்லையேடா?” என சிரித்தபடி சொல்லிக்கொண்டே கன்ஃபெஷன் ரூமில் இருந்து வெளியே வந்தார்.
பின்னர் அசீமிடம், சக நண்பர்கள் உட்கார்ந்து கதையை கேட்டனர். அதில் அசீம், “என் திருமணத்துக்கு பின்னர் நானும் என் மனைவியும் சில மாதங்கள் சந்தோஷமாகவே இருந்தோம். எங்களுக்கு மகன் பிறந்து மகனின் முதல் வருட பிறந்த நாளை ஜனவரி மாதம் கொண்டாடினோம். பிறந்தநாள் முடிந்து இரண்டு வாரம் கழித்து என் மனைவி அவருடைய சகோதரர் துபாயில் இருந்து வருவதாகவும் அவரை பார்ப்பதாகவும் சொல்லிவிட்டு சென்றார். அதுதான் குழந்தையை நான் கடைசியாக பார்த்தது. பிறகு 6 மாதம் கழித்து கோர்ட்டில் சிறுவர்கள் கஸ்டடி ரூமில் பார்த்தேன். அவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லக் கூடியதை பார்த்தேன்.
அந்த வலி என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. என் குழந்தை என்னை அப்பா என்று கூப்பிட கேட்க முடியாமல் ஆகிவிட்டேன். ஆனால் தாயையும் குழந்தையையும் பிரிக்க எனக்கு மனமில்லை. உனக்கு குழந்தை தானே வேண்டும் வைத்துக்கொள் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, நான் போட்ட கண்டிஷன் ஒன்றே ஒன்றுதான்.. உனக்கு தேவையான எத்தனை லட்சம் வேண்டுமானாலும் நான் தருகிறேன். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என் குழந்தையை என்னிடம் விட்டுவிடவேண்டும் என சொல்லிவிட்டேன்” என்று ஹவுஸ்மேட்களிடம் சொல்லி விட்டு அழத் தொடங்கினார் அசீம்.
Also Read | “பிச்சை எடுத்துடுவேன்னு பயந்து என் அம்மா”.. ஷிவின் கணேசனின் கண்ணீர் கதை.!