www.garudabazaar.com

"Swimming Pool-ல துணிய துவைச்சுடலாம்".. ஜிபி முத்து யோசிச்ச விஷயம்.. இவரு ஐடியா எப்பவும் வேற லெவல் தான்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டிற்குள் துணி துவைப்பது பற்றி ஜிபி முத்து சொன்ன விஷயம், போட்டியாளர்கள் மத்தியில் சிரிப்பலையை உண்டு பண்ணி உள்ளது.

Gp muthu wants to wash clothes in swimming pool bb6 tamil

Also Read | கிராமத்து 'கும்மி டான்ஸ்ல' இவ்ளோ வெரைட்டியா.. செம Vibe -ல் ஜிபி முத்து, மைனா.!

தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி மட்டுமில்லாமல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டு களிக்க முடியும்.

இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது. அது மட்டுமில்லாமல், சில போட்டியாளர்களுக்கு என்று பிரத்யேக ஆர்மி உருவாக்கி அவர்கள் குறித்த விஷயங்களை ரசிகர்கள் பலரும் வைரல் ஆக்கியும் வருகின்றனர்.

Gp muthu wants to wash clothes in swimming pool bb6 tamil

அதே போல, பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க் காரணமாக பல்வேறு வாக்குவாதங்கள் உள்ளிட்ட விஷயங்கள், போட்டியாளர்கள் இடையேயும் நடந்து வருகிறது. இதனால்,ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பும் அதிகமாக உள்ளது.

ஒரு பக்கம் எந்த அளவுக்கு பரபரப்பான விஷயங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே இருந்தாலும், மறுபக்கம் முதல் நாள் தொடங்கி இன்று வரை ஜிபி முத்து செய்யும் கலகலப்பான நிகழ்வுகள் பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Gp muthu wants to wash clothes in swimming pool bb6 tamil

அத்துடன் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் கூட, ஜிபி முத்துவின் செயலால் அதிகம் ஜாலியாகவும் இருந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஜிபி முத்து சொல்லும் விஷயமும், அதற்கு போட்டியாளர்கள் ரியாக்ஷனும் அதிகம் வைரலாகி வருகிறது.

உடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஜிபி முத்து, "Swimming Pool'ல அழகா தண்ணி இருக்கு. அப்படி சைடு'ல உக்காந்து அவ்வளவு துணியையும் நல்லா துவைச்சுடலாம். அப்படியே முக்கி முக்கி அலசி போட்டுடலாம். சமைக்கணுமே" எனக்கூற அங்கிருக்கும் சில போட்டியாளர்கள் சத்தம் போட்டு சிரிக்க தொடங்கி விட்டனர்.

தனது வட்டார மொழியில் மிகவும் வெள்ளந்தி போல, அதே வேளையில் வேடிக்கையாக ஜிபி முத்து பேசும் விஷயங்கள் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | Bigg Boss 6 Tamil : "பிக்பாஸ் வீட்ல உங்க பிளான் என்ன?.." கூலா ஜிபி முத்து சொன்ன பதில்!!..

தொடர்புடைய இணைப்புகள்

Gp muthu wants to wash clothes in swimming pool bb6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Vijay tv will find this news story useful.