www.garudabazaar.com

bigg boss 6 tamil : "வீட்டை விட்டு வெளியேற விரும்பும் GP முத்து.?" - சமாதானப் படுத்திய ஹவுஸ்மேட்ஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

want to go out gp muthu to housemates bigg boss 6 tamil

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் கவனிக்கத்தக்க போட்டியாளராக மாறி இருக்கிறார் ஜிபி முத்து. முன்னதாக முதல் நாள் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் தனியே சென்றதாக சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மேலும் பயமுறித்திய நடிகர் கமல்ஹாசன் ஜாலியாக ரசித்தார். பின்ன ஜிபி முத்து மழையில் ஆடினார். பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் போட்டியாளர்கள் குழுவாக பிரிந்தபோதும் கூட, மற்ற அணிகளுக்கு ஹெல்ப் பண்ணுவேன் என அடம் பிடித்து அனைவருடனும் பழகினார். இருப்பினும் தனலட்சுமி, தான் கோபமாக பேசியதை மரியாதைக்குறைவாக எடுத்துக்கொண்டதை குறிப்பிட்டு கடந்தவாரம் அழவும் செய்தார்.

இதனை தொடர்ந்து தற்போது வார இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை இந்த கமல்ஹாசன், ஜிபி முத்துவிடம் பாதாம் கொடுத்து அது என்ன என்று கேட்க, ஜிபி முத்து பாதாம் என்று சொல்ல, இது தெரிகிறது .. ஆதாம் தெரியவில்லையா? என கிண்டல் அடித்தார். அப்போதும், ஆதாம் எங்கே இருக்கிறார்? என்று வெள்ளந்தியாக ஜிபி முத்து கேட்டிருந்தார். அப்படிப்பட்ட மனிதர் ஜிபி முத்துவை தனக்கு பிடிக்கும் என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார். இந்த எபிசோடில் ஹீரோயின்கள் 2 பேர், தன்னுடன் நாயகிகளாக நடிக்க வேண்டும் என்றால், நயன்தாரா மற்றும் சிம்ரன் என்று ஜிபி முத்து குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் ஜிபி முத்துவுக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்பட்டது. அதன்படி ஊசி போட்டீங்களா என ஜிபி முத்துவை ரச்சிதா கேட்கிறார். படுத்துக் கொண்டிருக்கும் ஜிபி முத்துவை ரெஸ்ட் எடுக்க சொல்லும் ரச்சிதா, ‘எதுவா இருந்தாலும், கூப்பிடுங்கள்.. நீங்கள் எதுக்காகவாச்சும் எழுந்து வந்தீர்களேயானால் அடி விழும்!’ என செல்லமாக எச்சரிக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள்.. தலைவா.. ரெஸ்ட் எடுங்க.. என கூறி வந்தனர். 

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து, கேமரா முன்பாக சென்று நின்று, “ஆனந்த்... இந்த வீடியோவைப் பார்த்தால் கண்டிப்பாக ரேட் பண்ணவேண்டும்.. உள்ளே வந்து அண்ணனை விட்டு விட்டு உன் பாட்டுக்கு நீ இருக்காதே.. நான் உன்னிடம் சொல்லி இருக்கிறேன்.. பார்த்துக்கொள்.. முயற்சி செய். எதாவது வழி பண்ணு.. சொல்லிட்டேன்.. ஒரு அளவுக்கு தான்.. உன்னிடம் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.. அதன்படி தான் நானும் வந்திருக்கிறேன்.. பார்த்துக்கொள்.. திரும்பத் திரும்ப நான் சொல்கிறேன்.. இந்த வீடியோவை நான் நீ பார்த்தால் கண்டிப்பாக என்ன செய்ய வேண்டுமோ செய்ய வேண்டும்.. மணி, ஆனந்த் இருவருக்குமே சொல்லுகிறேன்!” என்று குறிப்பிடுகிறார். மேலும்  ஹவுஸ்மேட்களிடம் சொல்லி, தன்னை வெளியேற்ற நாமினேட் செய்ய சொல்லி கேட்கிறார்.

பின்னர் அவரிடம் பேசும் ஹவுஸ்மேட்கள் அசீம், ஏடிகே உள்ளிட்டோர், “ஆனந்த், மணி யாரும் வர மாட்டார்கள்.. நாங்களே நாமினேட் செய்தாலும் மக்கள் நினைத்தால் தான் நீங்கள் வெளியே போக முடியும். உங்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஓட்டு போட்டால் நீங்கள் உள்ளே தான் இருப்பீர்கள்” என்று சமாதானப்படுத்துகிறார்.

ஆனால் ஜிபி முத்து, “நான் இத்தனை நாள் தான் இருப்பேன் என்று மனசுக்குள் முடிவு செய்துவிட்டு தான் வந்தேன்.. அந்த தேதி நகர்ந்தால், நானே நகர்ந்து விடுவேன்.. நீங்கள் என்ன செய்தாலும் என் மனசு அப்படித்தான். காசு பணத்துக்கு நான் ஆசைப்படவில்லை. என் மனைவி ஆசைப்பட்டார். இன்னும் சில பேர் ஆசைப்பட்டார்கள். நான் பிக்பாஸ் வந்தேன். என் தம்பி உட்பட பலரிடமும் அதை தான் நான் சொல்லிக் கொண்டிருந்தேன். இருக்கும் வரை இருப்பேன். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தோமா போனோமா என இருக்கவேண்டும்.. நான் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் வரவில்லை. மனைவி, பிள்ளைகள் ஆசைப்பட்டதால் வந்தேன்” என்று அவர்களிடம் கூறுகிறார்.

want to go out gp muthu to housemates bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil promobigg boss 6 tamil contestants listbigg boss tamil, Bigg boss tamil 6bigg boss season 6vijay tvbigg boss tamil promo, Bigg boss tamil 6bigg boss tamil season 6bigg boss tamil 6 contestantsrachitha mahalakshmi will find this news story useful.