www.garudabazaar.com

bigg boss 6 tamil : பேசப் பேச அடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. பிக்பாஸின் விறுவிறு கதை சொல்லும் Task-ல் நடப்பது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

bigg boss 6 tamil story telling task பிக்பாஸ் 6வது சீசன்

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளராக தங்களுடைய கதையை சொல்லக்கூடிய நடைபெற்று வருகிறது. முந்தைய சீசன்களை போல் அல்லாமல், போட்டியாளர்கள் தங்களுடைய கதைகளை முழுமையாக செல்லக்கூடிய வாய்ப்பு இந்த முறை இல்லை. இந்தமுறை போட்டியாளர்கள் சொல்லக்கூடிய கதை சுவாரசியமாகவும் இன்ஸ்பிரேஷனாகவும் இல்லை என்று ஒருவர் கருதினால் உடனடியாக வந்து பஸ்ஸரை பிரஸ் பண்ணுவதன் மூலம், தங்களுடைய அதிருப்தியை தெரிவிக்கலாம். அப்படி 3 போட்டியாளர்கள் பஸ்ஸரை அழுத்திவிட்டால், கதை சொல்பவர் தங்களுடைய கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அடுத்தடுத்து தங்களுடைய கதைகளை சொல்லிக் கொண்டு வருகின்றனர். முன்னதாக ஜனனி, தனலட்சுமி, ஏடிகே, அசீம் மற்றும் பலரும் தங்களுடைய கதைகளைச் சொன்னார்கள். இதில் மைனா , ஷிவின் , தனலட்சுமி, நிவாஸினி கதைகளை சொல்லும் போது பெரிதாக யாரும் பஸ்ஸரை அழுத்தி தடுக்கவில்லை. மற்றவர்கள் கதை சொல்லும்போது பலரும பஸ்ஸரை அழுத்தி தடுத்து விட்டனர். இந்த நிலையில் தற்போது ஆயிஷா, குயின்சி, விக்ரமன், ரச்சிதா, ஷாந்தி  மற்றும் பலர் தங்களுடைய கதைகளை கூறுகின்றனர்.

இதேபோல் வீட்டில் இருக்கும் பலரும் இந்த முறை உடனடியாக ஓடிவந்து பஸ்ஸரை அழுத்தி கதையை தடுப்பதற்கு முயற்சிப்பதை காண முடிகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss 6 tamil story telling task பிக்பாஸ் 6வது சீசன்

People looking for online information on Ayesha, Bigg boss 6 tamil, Queency, Rachitha will find this news story useful.