www.garudabazaar.com

பாராசூட்டில் இருந்து Cute ah குதித்த நஸ்ரியா.. த்ரில் தருணம்! வைரலாகும் SKY DIVE போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நஸ்ரியா, துபாயில் ஸ்கை டைவிங் செய்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Nazriya Nazim Sky Diving Viral Image from Dubai

Also Read | EXCLUSIVE: கார்த்தி & ராஜூ முருகன் இணையும் புதிய படம்.. ஷூட்டிங் எப்போ? சரவெடி அப்டேட்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் 2013 ஆம் ஆண்டு வெளியான 'நேரம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா நசீம்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து ஏற்கனவே கேரளா முழுவதும் அறியப்பட்டவர் தான் நஸ்ரியா. தமிழில், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

Nazriya Nazim Sky Diving Viral Image from Dubai

நஸ்ரியாவுக்கு என்றே தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. முன்னணி நடிகையாக வலம் வந்த போதே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

Nazriya Nazim Sky Diving Viral Image from Dubai

திருமணத்திற்குப் பின்னர் சினிமாக்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். இதில் பகத் பாசில் கூட நடித்த ட்ரான்ஸ் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. சமீபத்தில் இந்த படம் நிலை மறந்தவன் என்ற பெயரில் தமிழில் வெளி வந்தது.

Nazriya Nazim Sky Diving Viral Image from Dubai

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உடன் இருக்கும் புகைப்படங்கள், கணவர் பகத்துடன் பயணம் செய்யும் புகைப்படங்களை பதிவேற்றுவார்.

Nazriya Nazim Sky Diving Viral Image from Dubai

இந்நிலையில் இன்று   இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை நஸ்ரியா பதிவிட்டுள்ளார். துபாயில் ஸ்கை டைவிங் செய்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Nazriya Nazim Sky Diving Viral Image from Dubai

அந்த பதிவில் "ஒரு வழியாக நடந்து விட்டது.   Oh My God.. அற்புதமான உணர்வு. விமானத்தில் இருந்து எனக்கு பிடித்த துபாயில் குதித்துள்ளேன். உண்மையிலேயே கனவு நிறைவேறிய தருணம்" என‌ நஸ்ரியா பதிவிட்டுள்ளார்.

இந்த ஸ்கை டைவிங் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றன.

Also Read | "போதும் டா வேலை செய்யலாம்".. கார்த்தி மடியில் அமர்ந்து கைதி BGM போட்டு லாரி ஓட்டிய ரித்து!

தொடர்புடைய இணைப்புகள்

Nazriya Nazim Sky Diving Viral Image from Dubai

People looking for online information on Dubai, Nazriya, Nazriya nazim, Nazriya Nazim Sky Diving will find this news story useful.