www.garudabazaar.com
iTechUS

Walking -ன்போது ஒரண்டை இழுத்த கோபி.. பதிலுக்கு ஷாக் கொடுத்த பாக்யா.. மனுசன் அள்ளு விட்டாரு Baakiyalakshmi

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி தன்னுடைய கணவர் கோபியை விட்டு பிரிந்து வாழ்கிறார்.

Gopi reaction on Baakiyalakshmi New Look trending

Also Read | தாய் மொழி பண்டிகையான  ‘பொங்கல்’ அடுத்த தலைமுறைக்கும் போக வேண்டும்.! - ஹிப் ஹாப் தமிழா

கோபியோ பாக்கியலட்சுமியை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை முறையாக திருமணம் செய்து கொண்டு அதே தெருவில் இருக்கும்  வீட்டில் குடியேறி வசித்து வருகிறார். இதனிடையே கோபி & பாக்கியலட்சுமியின் மகளான இனியா, தந்தை கோபியை வீட்டுக்கு அழைத்து வந்தே தீர வேண்டும் என்கிற முடிவுடன் கோபியுடன் சென்று வசித்து வருகிறார். இனியா சென்றதால் கோபியின் அப்பாவும் இனியாவின் தாத்தாவுமான பாக்கியலட்சுமியின் மாமனார் அதே வீட்டில் சென்று வசிக்க தொடங்கி விட்டார்.

Gopi reaction on Baakiyalakshmi New Look trending

இன்னொரு பக்கம் பாக்கியலட்சுமி செய்து வந்த சமையல் காண்ட்ராக்ட் பணி தற்போது சிக்கலை சந்தித்து மீண்டு எழுந்து வருகிறது. ராதிகாவுடனான தேர்தல் போட்டியில் பாக்கியலட்சுமி வெற்றி பெற்றார். ராதிகா இப்போதுதான் மெல்ல மெல்ல கோபியின் இன்னொரு முகத்தை அறிந்து கொண்டு வருகிறார். இதேபோல் அதிக வருமானத்தை வைத்தும் குடும்ப செலவுகளை மேனேஜ் பண்ண முடியாமல் ராதிகா திணற, ஆனால் கோபி முன்பு கொடுத்த குறைந்த பணத்தை கொண்டு பாக்கியலட்சுமி குடும்பத்தை நன்றாக நிர்வகித்ததுடன் வகை வகையாக சமைத்து போட்டார்.

Gopi reaction on Baakiyalakshmi New Look trending

இதனிடையே கணவர் கோபியின் உதவியின்றி, கணவரின் குடும்பத்தையும், தனது தொழிலையும் முன்னேற்ற பாடுபடுகிறார் பாக்கியலட்சுமி. அதன் ஒரு பகுதியாக மீண்டும் சமைத்து டேக் அவே உணவு பொருள் கடையை வீட்டிலேயே பல எதிர்ப்புகளை மீறி நடத்துகிறார். இந்த நிலையில் பாக்கியலட்சுமியை அவரது மருமகள் ஜெனி பார்லருக்கு அழைத்துச் சென்று பொலிவாக மாற்றிவிட்டார். இதை அறிந்த கொண்ட பாக்கியலட்சுமியின் மாமியார், வீடு எந்த நிலையில் இருக்கிறது? கணவர் விட்டு சென்று விட்டார். மகள் இனியா தன் அப்பாவிடம் செல்வதற்காக வீட்டை விட்டு சென்று விட்டாள். குடும்ப செலவு மோசமாக இருக்கிறது. இந்த நிலைமையில் உனக்கு பார்லர் தேவையா? வெக்கமா இல்லையா உனக்கு? என்று பேசுகிறார். இதை பார்க்கும் பாக்கியலட்சுமி மகன் எழில் மிகவும் சோகமடைகிறார்.

பின்னர் பாக்கியலட்சுமியின் மகன் எழில் மற்றும் மருமகள் ஜெனி இருவரும் பாக்கியலட்சுமிக்கு சப்போர்ட் செய்வதுடன் அவருடைய சுயமரியாதையை குறைத்து பேச வேண்டாம் என்று பாக்கியலட்சுமியின் மாமியாரிடம் மல்லு கட்டினர். இறுதியில் எப்படியோ போங்க என்று அவர் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இந்த காட்சி சென்சேஷனல் ஆனது. இதேபோல் ராதிகா பியூட்டி பார்லர் சென்று கோபியின் கார்டை தேய்த்து 16 ஆயிரம் செலவு செய்தது தெரிந்து கோபி அதிர்ந்து போனார். ஆனாலும் அவர் ராதிகாவிடம் கண்டிப்புடன் கேட்கவில்லை. சாதுவாகவே கேட்டார். அப்போது பியூட்டி பார்லரில் பாக்கியலட்சுமியையும் பார்த்ததாக ராதிகா அவரிடம் கூறியிருந்தார்.

Gopi reaction on Baakiyalakshmi New Look trending

இந்நிலையில் தற்போதைய புதிய ப்ரோமோவில் வாக்கிங் சென்று கொண்டிருந்த பாக்கியலட்சுமியையும், வீட்டு பணிப்பெண்ணையும் பார்த்த கோபி,  தன் நண்பரிடம், “கதை பேசுகிறவர்கள் எல்லாம் வீட்டிலேயே உட்கார்ந்து பேச வேண்டியதுதானே? எதுக்கு வாக்கிங்லாம் போறாங்க” என்று கிண்டல் அடித்துக் கொண்டு அங்கிருந்து செல்கிறார். அப்போது பாக்கியலட்சுமி ஒன்றும் பேசாமல் அங்கிருந்து சென்று விடுகிறார். மீண்டும் அடுத்த ரவுண்ட் வாக்கிங் வரும்போது இன்னொரு இடத்தில் கோபியை பாக்கியலட்சுமி சந்திக்க நேரிடுகிறது. அப்போது பாக்கியலட்சுமி தன் தலை முடியை அவிழ்த்து விடுகிறார். அதை பார்த்த கோபி பிரமித்து போய் நிற்கிறார். இவ்வாறாக இன்றைய பிரமோ முடிவடைந்து இருக்கிறது.

பாக்கியலட்சுமியின் புது லுக்கை பார்த்து கோபி மிரண்டுபோய்விட்டார். முன்னதாக, தான் பொலிவுடன் இல்லாததால் கோபி தன்னை தரக்குறைவாக நடத்துவார் என தன் மருமகள் ஜெனியிடம் சொல்லி பாக்கியலட்சுமி வருந்தியது குறிப்பிடத்தக்கது.

Also Read | “தமிழ் ரசிகர்களோட 'துணிவு' படத்தை பார்க்கணும்” - நம்ம ‘கண்மணி ’ மஞ்சு வாரியர் விருப்பம்!

தொடர்புடைய இணைப்புகள்

Gopi reaction on Baakiyalakshmi New Look trending

People looking for online information on Baakiyalakshmi, Gopi, Radhika Baakiyalakshmi today will find this news story useful.